
செய்திகள் மலேசியா
பொது மக்களிடம் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது: டத்தோ அபு தாரிக்
கோலாலம்பூர்:
பொது மக்களிடம் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என்று தேசிய வருமான வரி வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தேசிய வருமான வரி வாரியம் தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பொது மக்களிடம் துல்லியமாகக் கொண்டு சேர்க்கின்றனர்.
இது தேசிய வருமான வரி வாரியத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக நேற்று கோலாலம்பூரிலுள்ள வேஸ்டின் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அபு தாரிக் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமான ஊடகங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் உட்பட தேசிய வருமான வரி வாரியத்தின் ஊழியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக தேசிய வருமான வரி வாரியம் அதிக வருமான வரியை வசூலித்துச் சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு RM184.81 பில்லியன் வருவாயை வசூலித்துள்ளது.
இது கடந்த 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.4 விழுக்காடு அதிகம் என்றார் அவர்.
மேலும், இவ்வாண்டு வரவுச் செலவு திட்டத்தில் குறிப்பிட்டது போல் இவ்வாண்டு RM 200 பில்லியன் வருவாயை ஈட்ட தேசிய வருமான வரி வாரியம் இலக்கு கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் முழுமையாக கட்டாயமாக்கப்படும் மின்னியல் கட்டணமுறை, E-Invois-யைக் குறைந்தது 200,000 வர்த்தகர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் செயல்படுத்துவதை தேசிய வருமான வரி வாரியம் இலக்குக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
RM500,000 முதல் RM25 மில்லியன் வரை வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மின்னியல் கட்டணமுறையைச் செயல்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்ட இரு தவணைகளில் 20,000 வர்த்தக நிறுவனங்கள் மின்னியல் கட்டணமுறையை செயல்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடயே நம்பிக்கை ஊடத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனை நம்பிக்கை குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் பெற்றுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm