
செய்திகள் மலேசியா
இந்தியா, சிங்கப்பூர் இடையே மீண்டும் பறக்கும் 'வந்தே பாரத்' விமானங்கள்
சிங்கப்பூர்:
இந்தியாவில் இருந்து தினந்தோறும் 25 பயணிகள் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைகின்றனர் என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமம் பெற்றவர்கள் ஆவர். அதபோல் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் விமானத்தில் நாள்தோறும் சராசரியாக 180 பயணிகள் செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கி உள்ள தனது குடிமக்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மூலம் திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் மூலம் வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் B1617 கொரோனா திரிபு தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சாங்கி விமான நிலையத்தில் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டதாகவும் அங்கிருந்து வரக்கூடிய விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சிங்கப்பூர்-இந்தியா இடையே வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm