
செய்திகள் மலேசியா
இரட்டை முகக் கவசங்களையும், முகத்தடுப்புகளையும் பயன்படுத்துவது நல்லது: நூர் ஹிஷாம்
இரட்டை முகக் கவசங்களையும், முகத்தடுப்புகளையும் பயன்படுத்துவது நல்லது: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
இரட்டை முகக் கவசங்களையும், முகத்தடுப்புகளையும் பயன்படுத்தவது நல்லது என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதன்மூலம் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும், தொற்றைப்பரப்புவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ள 'ஹாட் ஸ்பாட்' பகுகதிகளில் இருந்தும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா சார்ந்த தொற்றுகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இரட்டை முகக் கவசங்கள் 95 விழுக்காடு பலனளிப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் கூறியுள்ளார். இதேபோல் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களும் மருத்துவப் பணியாளர்களும் மூன்றடுக்கு கொண்ட அல்லது N95 முகக்கவசங்களை அணியவேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா கிருமி காற்றின் வழி கூட பரவும் என கூறப்படும் நிலையில், இரட்டை முகக் கவசங்களை அணிவதை ஊக்கப்படுத்த வேண்டியதாக உள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm