
செய்திகள் மலேசியா
64,000 குழந்தைகளுக்குப் பாதிப்பு: யார் பொறுப்பேற்பது? நஜிப் கேள்வி
கோலாலம்பூர்:
மே 18ஆம் தேதி வரை மலேசியாவில் 64,000 பள்ளிக் குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த பாதிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவது யார் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நஜிப்.
"கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் பள்ளிகளில் உள்ள நோய்த் தொற்றுத் திரள்கள் (கிளஸ்டர்) தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அப்போதே 23,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"பள்ளிகளை முன்கூட்டியே மூடுமாறு நான் முன்பே வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இன்றுவரை இப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து கல்வி அமைச்சர் பதிலளிக்கவில்லை. ஆனால், அப்போது பள்ளிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டது," என்று நஜிப் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 18ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 64,046 குழந்தைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள நஜிப், அந்தக் குழந்தைகள் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் வயதில் மூத்தோர் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm