நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளித்த கவுரவம்

துபாய்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருதக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர்.

நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் ஐக்கிய அரபு அமீரகம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

கோல்டன் விசா அளித்ததற்காக ஐக்கிய அரபு அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset