நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்பு நீரையும் சோற்றையும்  கலந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்த மக்களை நினைக்க வேண்டும்; அமைச்சர் உருக்கம்; ஏன் முழுமையான MCO அமலாக்கம் இல்லை: அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விளக்கம்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிப்பதற்கு எதிராக அரசாங்கம் முடிவெடுத்தது சரிதான் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

எனினும் முழு முடக்க நிலைக்கு எதிராக அத்தனை சுலபத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மலேசிய குடிமக்களின் சுகாதார நலன்களைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில் அவர்களின் பொருளாதார நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. முதலாவது நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தபோது அரசாங்கத்துக்கு 2.4 பில்லியன் மலேசியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். சிறு வணிகர்கள் தினம்தோறும் பெற்று வந்த சம்பாத்தியம் முற்றிலுமாக நின்று போனது.

"மேலும் உப்பு நீரையும் சோற்றையும்  கலந்து சாப்பிட்டுஉயிர் வாழ்ந்த குடும்பங்கள் குறித்தும் கேள்விப்பட்டோம். இவை அனைத்தும் உண்மை. குறிப்பாக ஏழைகளும் மற்றும்  B-40 வகையினரும் அனுபவித்ததை அரசு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

"பெரிய நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்தால் அந்நிறுவனங்கள் மூடப்படலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பாதிக்கப்படுவது அந்நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்ல, அதன் தொழிலாளர்களும்தான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

"முதலாவது MCO காலகட்டத்தில் சுமார் 800,000 பேர் தங்கள் பணியையும் வருவாயையும் இழந்தனர். அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் மக்களால் எவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும்? எனவே, நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்போது முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது நடந்தது போல் SOPகள் தளர்த்தப்படும்," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset