நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுய முடக்க நிலையைக் கடைப்பிடியுங்கள்: நூர் ஹிஷாம் வேண்டுகோள்

கோலாலம்பூர்:

மலேசியர்கள் தமக்குத் தாமே சுய முடக்க நிலையை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்கு மலேசியர்கள்  இவ்வாறு செயல்பட்டால் தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு அது வலு சேர்க்கும் என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

"மனிதர்கள் மட்டுமே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்கிறோம். ஒன்றாகக் கூடுகிறோம். ஆனால், கிருமிகள் இவ்வாறு ஒன்றுகூடுவதில்லை. அவை  மனிதர்கள் மூலம்தான்  இடம்பெயர்கின்றன; பிறரைத் தொற்றுகின்றன.

"எனவேதான் நான் வீட்டிலேயே இருக்கவேண்டி உள்ளது. நமது நகர்வுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அடுத்த இரு வாரங்களுக்கு மலேசியர்கள் சுயமுடக்க நிலையைத் தமக்குத் தாமே கடைப்பிடித்தால் தொற்றுச் சங்கிலியை உடைக்க அது உதவிகரமாக அமையும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset