
செய்திகள் மலேசியா
சுகாதார அமைச்சுக்கு மேலும் 200 மில்லியன் ரிங்கிட்: நிதியமைச்சு ஒதுக்கீடு
புத்ராஜெயா:
கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் கூடுதலாக 200 மில்லியன் மலேசியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை கூட்டரசுப் பிரதேச அரசின் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அசிஸ் Datuk Seri Tengku Zafrul Abdul Aziz அறிவித்துள்ளார்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஒரு பில்லியனை எட்டிப் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகையைக் கொண்டு பல்வேறு உபகரணங்களை சுகாதார அமைச்சால் வாங்கமுடியும் என்றும் கொரோனாவுக்கு எதிரான .போராட்டத்துக்கு இந்நடவடிக்கை உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கொரோனாவுக்கு எதிராக அரசாங்கம் பெரும் தொகையைச் செலவிட்டு வருகிறது. இந்நிலையில் நாடு மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எதிர்கொண்டு போராடி வருகிறது.
எனவே, தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு புதிய உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm