செய்திகள் மலேசியா
இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்: டத்தோஸ்ரீ எம். சரவணன் வாழ்த்து
கோலாலம்பூர்:
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தெ லுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கூறியுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நாம் ஒரே மலேசியக் குடும்பமாக ஒவ்வொரு பெருநாளையும் கொண்டாடி மகிழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியர்களின் தனிச்சிறப்பு.
அதே வேளையில் இந்த நாட்டில் நாம் பல்லின சமூகமாக வாழ்ந்தாலும், இந்தியர்கள் எனும் அடையாளத்தை ஒரு போதும் இழந்து விடக் கூடாது. நாம் ஒட்டு மொத்த இந்திய சமூதாயமாக இருக்கும் போதுதான் பலமான சமுதாயமாக, நமது உரிமைகளைப் பெறக் கூடிய சமூதாயமாக இருப்போம் என்பதை அனைவரும் நினைவு கூற வேண்டும்.
இப்புத்தாண்டு அனைவருக்கும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும். அனைவருக்கும் இனிய உகாதி சுபகாஞ்சலு என்று தனது வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
