நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது

ஷாஆலம்:

வணிகப் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதைத் தடை செய்யும் புதிய திட்டமிடல் வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

வணிகப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடமிருந்து ஊராட்சி அமைப்புக்கு கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டதாக மந்திரி புசார் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

வணிகப் பகுதிகளில் இடவசதி குறைவாக இருப்பதாலும், அவை சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகக்கூடும் என்பதாலும்,

போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்வதையும், சிறந்த வாகன நிறுத்துமிட வசதிகளை உறுதி செய்வதையும் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதல்கள் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வணிக அல்லது பிற வளாகங்களில் இயங்கி வரும் வழிபாட்டுத் தலங்களைப் பாதிக்காது.

எதிர்காலத்தில், குடியிருப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் ஒவ்வொரு புதிய பகுதியிலும், முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கான வழிபாட்டுத் தலங்களுக்கு நிலம் கெசட் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset