நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் காளியம்மன் ஆலயத்திற்கு 50,000 ரிங்கிட் மானியம்; பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலயப் பிரச்சினைகளுக்கு முறையாக தீர்வுக் காணப்படும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலயப் பிரச்சினைகளுக்கு முறையாக தீர்வுக் காணப்படும்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இதனை கூறினார்.

செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தற்போது திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த திருப்பணிக்கு உதவும் வகையில் 50,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது. இந்நிதி ஆலய நிர்வாகத்திற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும் இவ்வாலயத்திற்கு பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில் நிலப்பட்டா கிடைத்துள்ளது.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஆலய நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகள் என்று அவர் கூறினார்.

இதனிடையே கூட்டரசுப் பிரதேச அமைச்சருடன் ஆலய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அப்போது ஆலயப் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களே கண்காணிக்க வேண்டும் என உதரவிட்டார்.

அவ்வகையில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலயப் பிரச்சினைகளுக்கு முறையாக தீர்வுக் காணப்படும்.

அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset