செய்திகள் மலேசியா
யூபியூ நேர்காணல்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சிறப்பு விளக்கக் கூட்டம் மே 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது: விக்னேஷ்
கோலாலம்பூர்:
யூபியூ நேர்காணல்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சிறப்பு விளக்கக் கூட்டம் இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
பியோண்ட் மலேசியா கல்வி நிறுவனத்தில் தலைமை இயக்குநர் விக்னேஷ் கிருஷ்ணகுமார் கூறினார்.
மருத்துவம், மருத்துவம் சார்ந்த உயர் கல்விக்கான யூபியூ நேர்காணல் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணலுக்கு நமது மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த நேர்காணல்களில் மாணவர்கள் தோல்விக் காணக் கூடாது என்ற நோக்கில் இந்த விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது.
யூகேஎம் இந்திய மருத்துவ மாணவர்களும் பியோண்ட் மலேசியா கல்வி நிறுவனமும் இணைந்து இதை நடத்துகிறது.
வரும் மே 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கும் மே 26ஆம் தேதி இரவு 8.00 மணிக்கும் ஜூம் வாயிலாக இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
யூபியூ மூலம் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் ஃபவுண்டேஷன், மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக இக்கூட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
அதே வேளையில் எங்களின் முந்தைய அமர்வின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மருத்துவம், சுகாதார நேர்காணல் மாஸ்டர் கிளாஸ் முன்பை விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும், மேலும் ஆழமானதாகவும் மீண்டும் வந்துள்ளது.
ஆக மாணவர்கள் திரளாக வந்து இதில் கலந்து பயன் பெறுமாறு விக்னேஷ் கேட்டுக் கொண்டார்.
இந்த விளக்கக் கூட்டம் தொடர்பான மேல்விவரங்களுக்கு டேரன் 012-2722806,
சேகர் 011-53016307 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
