நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

கிக் தொழிலாளர்களின் நலன், எதிர்காலத்தை உறுதிசெய்யும் நோக்கில், சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தொழில்முறை வாழ்க்கை உயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு புதிய திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில்,

தொழிலாளர்களின் பொருளாதார மீள்திறனை மேம்படுத்துவதற்காக 20 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டுடன் கூடிய பொருளாதார நிலைத்தன்மைத் தொகுப்புத் திட்டம் (பேஸ்), அதிநவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை வழங்குவதற்காக 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘மை மாஹிர்’ திட்டம் ஆகியவை மனிதவள அமைச்சினால் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் முக்கிய முயற்சிகளாகும்.

இத்திட்டங்கள் அனைத்தும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் பி-ஹெய்லிங் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிக் தொழிலாளர் சமூகத்தையும் வலுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு இருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
இன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 கிராப் ஓட்டுநர்கள், விநியோகப் பங்காளர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட கிராப் பங்காளர்களின் பாராட்டு விழாவில் சிறப்புரையாற்றியபோதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

மேலும், கிக் தொழிலாளர்கள் மனிதவளத் துறையின் கீழ் இயங்கும் ‘ஏடிதெக்’  மையங்கள் வழியாகத் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதே வேளையில் இன்னும் பரந்த வேலைவாய்ப்புகளையும் தொழில்முறை முன்னேற்றங்களையும் எட்டுவதற்கு பெர்கேசோவின் 'MYFutureJobs' தளத்தை ஒரு சிறந்த ஊக்கியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் விவரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset