செய்திகள் மலேசியா
பெரும்பான்மை மக்களின் குரல்களைத் தீவிர சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்: பிரதமர்
கோலாலம்பூர்:
அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் பெரும்பான்மை மக்களின் குரல்களைத் தீவிர சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டாம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்துக் கட்சிகளையும் இதனை கேட்டுக்கொண்டார்.
தற்போது, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதற்காக இன, மத உணர்வுகளைத் தூண்டிவிடும் சில கட்சிகள் உள்ளன.
தற்போது, சத்தமிடுபவர்கள், கோபப்படுபவர்கள், மக்களைத் தூண்டிவிடுபவர்கள், கூட்டங்களை உருவாக்குபவர்கள், வெறுப்பை விதைப்பவர்கள், அவதூறு பரப்புபவர்கள், மக்களை அச்சுறுத்துபவர்கள் சிறுபான்மையினரே.
மலேசிய பௌத்த ஆலோசனைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தினக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற குடிமக்கள் நல்லிணக்கக் கலந்துரையாடலில் பேசிய அவர்,
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான்கள், கடசான்கள், பிறர் என பெரும்பான்மையான மலேசியர்கள், ஒரு அமைதியான, நிலையான, வெற்றிகரமான நாட்டை விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
