நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்

கோலாலம்பூர்:

சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு உதவுவோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சிறு வணிகர்களுக்கு, குறிப்பாகக் கடன்கள் வடிவில், உதவி வழங்கும் முகமைகள், சம்பந்தப்பட்ட வணிகர்களின் வணிக இடங்களுக்கே சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளைப் பற்றி விளம்பரப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் இந்த வசதிகள் பரவலாகக் கிடைத்தபோதிலும், அரசு முகமைகளால் வழங்கப்படும் கடன்கள், உதவிகளின் பலன்களைப் பற்றி இன்னும் அறியாத சிறு வணிகர்கள் இருப்பதை தாம் கண்டறிந்ததால், இந்த நடவடிக்கை முக்கியமானது.

கஸானா ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், நாட்டில் கடன் வசதிகள் பரவலாக இருந்தாலும், அவை இலக்குக் குழுவினருக்குத் தெரியாமலும் பயன்படுத்தப்படாமலும் உள்ளன என்று கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முகமைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லாமல், நாம் நேரில் சென்று அதன் நன்மைகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset