செய்திகள் மலேசியா
கடந்தாண்டு வேலைக்குச் செல்லும், திரும்பும் பயணத்தின் போது 50%க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன: பெர்கேசோ
கோலாலம்பூர்:
கடந்த 2025ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 91,456 விபத்துகளில் 50.9% அல்லது 46,542 சம்ப பயணத்தின்போது ஏற்பட்ட விபத்துகள் என பெர்கேசோ வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே, ஒரு கவலைக்குரிய போக்கையும் காட்டுவதாக பெர்கோசோவின் தலைமைச் செயல் அதிகாரி முகமது அஸ்மான் ஹஜிஸ் முகமது கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்களின் முதுகெலும்பாக இருந்தவர்கள்.
எனவே, இந்தக் கவலைக்குரிய சூழ்நிலைக்கு, வெறும் எதிர்வினை ஆற்றும் அணுகுமுறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கை தேவைப்படுகிறது.
ஏனெனில், பெர்கேசோ உதவித் தொகைகளை வழங்குவது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு அல்ல.
இன்று இங்கு நடைபெற்ற மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் பிரச்சாரத்தின் (MyRider) தொடக்க விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
சாலை விபத்துகள், குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், சொக்சோ, போலிஸ்படையின் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையுடன் இணைந்து MyRider திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
