செய்திகள் மலேசியா
வேலைவாய்ப்பு சோதனையில் “பொய் கண்டறியும்” பாலிகிராஃப் தொழில்நுட்பம்
கோலாலம்பூர்:
வேலைவாய்ப்பு சோதனை, நிறுவன ஒழுக்கம், பாதுகாப்பு விசாரணைகளில் “பாலிகிராஃப்” எனப்படும் பொய் கண்டறியும் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “மலேசிய பாலிகிராஃப் கருத்தரங்கு”இல், போலிஸ், ராணுவம், குடிவரவு துறை, சுங்கத்துறை, சுகாதார அமைச்சு, TNB, பல முக்கிய அரசு, தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 60 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் செயல்முறையில் பாலிகிராஃப் தொழில்நுட்பத்தை ஆதரவு கருவியாக பயன்படுத்துவது,
நிறுவன நேர்மையை பாதுகாப்பது,
பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை மேலும் துல்லியமாக நடத்துவது இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
எஸ்.பி.ஆர்.எம்-இன் மலேசிய ஊழல் தடுப்பு அகாடமி (MACA) துணை இயக்குநர் முஹம்மத் சவுத் அயத்துல்லாஹ் அப்துல் மனான்,
“பாலிகிராஃப் துறையில் தேசிய அளவிலான அறிவு, திறன், சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்த இந்த கருத்தரங்கு மிக முக்கியமான தளமாக அமைகிறது,” என்றார்.
மேலும்,“குற்றச்செயல்கள், ஒழுங்கின்மை, நேர்மை மீறல்களுக்கு எதிரான போராட்டத்தில், பல்வேறு அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு இன்னும் வலுப்பெற வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனுடன், எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்காக சிறப்பு “அடிப்படை பாலிகிராஃப், செயல்பாட்டு ஆதரவு” பயிற்சியும் நடத்தப்பட்டது. இதில் 17 பாலிகிராஃப் பரிசோதகர்கள் தீவிர பயிற்சி பெற்றனர்.
மலேசியாவில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு சோதனைகளில் பாலிகிராஃப் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்றப்போகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
