செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலைகளில் வாகன வெள்ளம், முக்கிய பாதைகளில் கடும் நெரிசல்: மலேசிய நெடுஞ்சாலை வாரியம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
ஹஜ்ஜுப் பெருநாள் நீண்ட பள்ளி விடுமுறை காலத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்) தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் சுமார் 2.9 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நுழைந்ததாக பதிவாகியுள்ளது. குறிப்பாக கோம்பாக் – கெந்திங் செம்பா, லான்சாங் – புக்கிட் திங்கி, லான்சாங் – தெமர்லோ ஆகிய பாதைகள் “ஹாட்ஸ்பாட்” பகுதிகளாக மாறியுள்ளன.
மேலும், PLUS நெடுஞ்சாலையின் மெனோரா சுரங்கப்பாதை, தாப்பா – கோப்பெங், ஸ்லிம் ரிவர் – சுங்காய், பாங்கி – புத்ரா மகோத்தா, நீலாய், சிரம்பான் உள்ளிட்ட பல இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜொகூரில் உள்ள ஆயர் கெரோ, பாகோ, யோங் பெங், செடேனாக், கூளாய் பகுதிகளும் நெரிசல் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கிழக்கு கடற்கரை நோக்கிய பயணங்களில் வாகன ஓட்டம் 1.5 கிலோமீட்டரைத் தாண்டினால், “எதிர்திசை பாதை திட்டம்” (Contraflow) உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் எல்.எல்.எம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நாடு முழுவதும் 34 Smart Lane பாதைகள் அவசர வழித்தடங்களில் திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பயணிகள் தங்கள் Touch ‘n Go, RFID e-Wallet இருப்புகளை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்றும், பயண நேரத்தை புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உச்சகட்ட நாட்களில், தினசரி வாகன எண்ணிக்கை 3.3 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
