செய்திகள் மலேசியா
குறுகிய காலத்தில் 3 பிரதமர்களை மாற்றி நிலையற்ற அரசியல் தன்மையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது: குணராஜ்
கோலாலம்பூர்:
குறுகிய காலத்தில் மூன்று பிரதமர்களை மாற்றிய நிலையற்ற அரசியல் தன்மையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் குறுகிய காலத்தில் மூன்று பிரதமர்களை மாற்றிய அரசியல் நிலையற்ற தன்மையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் நிலைத் தன்மையை தொடர்ந்து பேண வேண்டும்.
முந்தைய காலங்களைப் போல குறுகிய காலத்தில் மூன்று பிரதமர்களை மாற்றுவது போன்ற அரசியல் குழப்பங்கள் மீண்டும் ஏற்பட்டால், நாட்டின் பொருளாதாரம், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.
நிலையான அரசாங்கம் இருந்தால் மட்டுமே வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்பு, பொருளாதார மீட்சி போன்ற மக்களின் முக்கிய பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும்.
முன்பு இருந்த நிலையற்ற சூழ்நிலைக்கு மக்கள் திரும்ப விரும்பவில்லை.
அரசாங்கம் மாறிக்கொண்டே இருக்கும்போது, மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்றைய மக்கள் ஒரு நிலையான வருமானம், வீட்டில் போதுமான உணவு, குழந்தைகள் நன்றாகப் படிப்பது மற்றும் மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்புகிறார்கள்.
கோத்தா ராஜா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின் நடப்புப் பிரச்சினைகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 5:38 pm
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசு ஆதரிக்கிறது
May 23, 2026, 5:36 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2026, 2:22 pm
சிறு தொழில் வணிகர்களுக்கு நேரில் சென்று உதவுவோம்: பிரதமர்
May 23, 2026, 12:44 pm
