நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்குக்கு தடுப்பூசி நன்கொடை: அப்படியொரு நிறுவனமே இல்லை என்கிறார் கைரி

கோலாலம்பூர்:

சீன நிறுவனம் ஒன்று பினாங்கு மாநில அரசுக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கப்போவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.

பினாங்கு அரசு குறிப்பிட்டது போன்ற ஒரு நிறுவனமே இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காணொலிவழி இன்று  செய்தியாளர்களை தொடர்பு கொண்டு  பேசினார் அமைச்சர் கைரி. அப்போது, "பினாங்குக்கு சினோவாக் தடுப்பூசிகள் நன்கொடையாக அளிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், சினோவாக் தடுப்பூசியை சீனாவில் தயாரிக்கும் நிறுவனமோ, மலேசியாவில் அதை விநியோகிக்கும் நிறுவனமோ இதுதொடர்பாக தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளன," என்றார் அமைச்சர் கைரி.

"குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பில் சினோவாக் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

"சினோவாக் பயோடெக்கின் அனைத்துலக விற்பனை பிரிவின் தலைவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். இது தொடர்பாக எந்த தகவலும் தமக்குத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

பினாங்கு அரசாங்கம் குறிப்பிடும் நிறுவனம் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் கைரி, ஹாங்காங்கில் அப்படியொரு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

எனவே, பினாங்கு முதல்வர் தெரிவித்தது ஒரு போலியான விஷயம் என்றும் இது ஒரு மோசடி என்றும் அமைச்சர் கைரி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset