நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூஐடிஎம் -  டெக்ட்ரா நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் இரயில் பொறியியல் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்: கார்த்தினி ஹம்சா

ஷாஆலம்: 

யூஐடிஎம் -  டெக்ட்ரா நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் இரயில் பொறியியல் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

டெக்ட்ரா குழுமத்தின் தலைமை இயக்குநர் கார்த்தினி ஹம்சா இதனை கூறினார்.

இரயில் பொறியியல் துறையில் அதிகமாக நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உருவாக்க யூஐடிஎம் -  டெக்ட்ரா நிறுவனம் ஆகியவை  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

டெக்ட்ரா நிறுவனத்துடனான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், 

தொழில் துறையுடனான அதன் ஒத்துழைப்பை மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடர்ந்து வலுப்படுத்துவது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரயில் பொறியியல், கட்டுமானத் தொழில்களில் முழு  ஒத்துழைப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இது புதுமை, ஆராய்ச்சி, தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டெக்ட்ரா நிறுவனத்துடனான  இந்த ஒத்துழைப்பு யூஐடிஎம் மாணவர்கள் தொழில்துறை திறனை பெற அதிக வாய்ப்புகளைத் திறக்கும்.

இந்த ஒப்பந்தம் வெறும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுவது மட்டுமல்ல. நிலையான, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் கல்வி, தொழில்துறை சுற்றுச் சூழல் அமைப்பை வளர்ப்பதில் ஒரு கூட்டு உறுதிப்பாடாகும் என்று யூஐடிஎம் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஷாஹ்ரின் சாஹிப் கூறினார்.

இரயில் பொறியியல் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர பட்டதாரிகளை உருவாக்குவதில் யுஐடிஎம்முடனான இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இந்தத் துறையில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதில் யூஐடிஎம்முடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கார்த்தினி ஹம்சா கூறினார்.

முன்னதாக இந்த ஒத்துழைப்பில் யூஐடிஎம்மின் ஸ்மார்ட் உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனம் அடங்கும்.

பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து, உள்கட்டமைப்பு பிரிவின் தலைவரும் ஆராய்ச்சி உறுப்பினருமான இணைப் பேராசிரியர் ஐஆர் டி.எஸ். டாக்டர். ரெங்கா ராவ் கிருஷ்ணமூர்த்தி வாயிலாக கூடுதலாக 25,000 ரிங்கிட் மானியத்தை தொழில்துறை ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்மானியம் பசுமைப் பொருட்களைப் பயன்படுத்தும் உயர் வலிமை கொண்ட ஜியோபாலிமர் கான்கிரீட் இரயில்வே ஸ்லீப்பர்கள் தொடர்புடைய ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

விரைவில் அதற்கான திட்டங்கள் தொடரும் என்று டெக்ட்ரா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோன் ஆனந்த் ராஜ் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset