நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தளர்வுகள்: மலேசிய கல்வி அமைச்சு வழங்குகிறது 

குளுவாங்: 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்குப் பள்ளிச் சீருடை அணியாமல் பள்ளிக்கூடத்திற்கு வரலாம். சாதாரண உடையணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வர தளர்வு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டாக்டர் ஃபட்லினா சிடேக் கூறினார் 

இதனால் மாணர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லவும் அவர்கள் பெற்றோர்களை சுமைக்கு உள்ளாக்க கூடாது என்பதை முன்னிருத்தி இந்த தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிச் சீருடைகளை வெள்ள நிவாரண மையங்களுக்கு எடுத்து வரவில்லை. 

தொடர் மழையாலும் பள்ளிச் சீருடையைத் தயார் செய்ய நேரம் இல்லை என்று அமைச்சர் கருத்துரைத்தார் 

முறையான மற்றும் நேர்த்தியான பள்ளிச் சீருடைகள் அல்லாத உடைகளை மாணவர்கள் அணிந்து வரலாம் என்று அவர் சொன்னார் 

முன்னதாக, குளுவாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை டாக்டர் ஃபட்லினா சிடேக் நேரடியாக சென்று நலம் விசாரித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset