நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியரைப் பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 33 ஆண்டுகள் சிறை, 20 பிரம்படிகள் விதிப்பு 

புத்ராஜெயா: 

இரு முறை அரசு ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தது, பாதிக்கப்பட்டவரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொழிலாளி ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை, 20 பிரம்படிகள் தீர்ப்பளித்தது 

குற்றஞ்சாட்டப்பட்ட ஹசான் அஹ்மாத்தின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிபதி அஹ்மத் சைடி இப்ராஹிம் அவ்வாடவருக்கு இந்த தண்டனையை வழங்கினார் 

பாலியல் பலாத்காரம் குற்றம் புரிந்தது தனியே என்பதனால் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தனித்தனியே சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார் 

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்தி மேல்முறையீட்டு நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்தார். சிறை தண்டனையைத் தவிர்த்து செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 20 பிரம்படி தண்டனையும் நிலைநிறுத்தப்படுகிறது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது 

செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் நிலைநிறுத்தப்படுகின்றன. இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் மிகவும் கொடூரமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset