நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்: நான்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்சார விநியோக சிக்கல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் லண்டனுக்குச் செல்லும் நான்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது 

இந்த தகவலை MALAYSIAN AVIATION GROUP ( MAG) நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட MH2 விமானம் லண்டனுக்கு செல்லாமல் மாறாக நெதர்லாந்து நாட்டின் அம்ஸ்டெர்டெம் சிப்போல் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றது 

அதுமட்டுமல்லாமல், MH3, MH4 விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட இரு விமானங்களும் இன்று ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது 

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தடங்கலுக்கு வருந்துவதாக ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset