நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

29 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கொடுத்த RM3 நோன்பு பெருநாள் அன்பளிப்பை வைத்திருக்கும் ஷாமில் 

கோலாலம்பூர்: 

ஷாமில் சுய்ப் என்பவர் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கொடுத்த RM3 நோன்பு பெருநாள் அன்பளிப்பை இன்றைக்கும் அவரின் நினைவாக வைத்திருப்பது குறித்து அவர் தன் சமூக ஊடகத்தில பகிர்ந்துள்ளார். 

அப்பதிவில் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து பெரு நோன்பு பெருநாள் அன்பளிப்பைப் பெறுவது வழக்கம் ஆனால் நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடமிருந்து தமக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு விலைமதிப்பற்றது என்று தெரிவித்துள்ளார். 

5 வயதாக இருந்த போது கெடாவிலுள்ள டேவான் ஜித்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது துன் மகாதிரிடமிருந்து அந்த மூன்று ரிங்கிட் நோன்பு பெருநாள் அன்பளிப்பைத் தாம் பெற்றதாக ஷாமில் நெகிழ்ச்சியாகக் கூறினார். 

திவான் ஜித்ராவில், தனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது, ​​டியூயிட் ராயா வழங்கப்பட்டதாக சியாமில் வெளிப்படுத்தினார்.

RM3 மதிப்புள்ள 10 சென் நாணயங்கள் ஒரு காகிதத்தில் சுருட்டி வழங்கப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.  

இந்த விலைமதிப்பற்ற அன்பளிப்பு வழங்கிய துன் மகாதீருக்கு நன்றி என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.

சியாமில் குழந்தையாக இருந்தபோது, ​​பாஜு மிலாயு, சொங்கோ  உடையில் நேர்த்தியாக உடையணிந்து, துன் டாக்டர் மகாதீர் பின்னால் நிற்கும் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset