நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயிற்சி பட்டறையில் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு 

மூவார்: 

கடந்த மாதம் பள்ளியொன்றில் ஜெட் செய்வதற்கான பயிற்சி பட்டறையில் ஈடுபட்டிருந்த 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் இங்குள்ள மூவார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

குற்றஞ்சாட்டப்பட்ட 65 வயது லன் சைரான், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

கடந்த பிப்ரவரி 26, 27ஆம் தேதிகளில் குளுவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 வயது மாணவிகளுக்கு எதிராக அவ்வாடவர் இந்த குற்றத்தைப் புரிந்துள்ளார் 

2017ஆம் ஆண்டு சிறார்கள் பாலியல் குற்றத்தின் செக்‌ஷன் 14(ஏ) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது 

இந்த சட்டமானது 20 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படிகள் வழங்க வழிசெய்கிறது 

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 48 ஆயிரம் பினை தொகையுடன் கூடிய ஜாமின்  நீதிபதியால் வழங்கப்பட்டது 

இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset