நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹேங்கரைக் கொண்டு சிறுவனைத் தாக்கிய தந்தை மூன்று நாட்களுக்கு தடுத்து வைப்பு 

பெட்டாலிங் ஜெயா: 

துணிக்குப் பயன்படுத்தும் ஹேங்கரைக் கொண்டு சிறுவனைத் தாக்கிய தந்தைக்கு எதிராக இங்குள்ள பத்து பஹாட் நீதிமன்றம் மூன்று நாட்கள் தடுப்பு காவலை விதித்தது 

எட்டு வயது சிறுவன் சைக்கிளை செலுத்தும் போது வீட்டின் நுழைவாயில் கதவை மோதிய நிலையில் ஆத்திரம் அடைந்த 41 வயது தந்தை அந்த சிறுவனைத் தாக்கியுள்ளார் 

சிறுவனைத் தாக்கியதில் சிறுவனுக்குக் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது 

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது சகோதரியின் அறைக்குச் சென்று தஞ்சம் அடைந்தான். பிறகு அந்த சிறுவன்  காவல்நிலையத்தில் தமது தந்தைக்கு எதிராக புகார் அளித்தார் 

விவாகரத்து பெற்ற  தந்தையுடன் அந்த இரு பிள்ளைகளும் வசித்து வருவதாக தெரிகிறது 

இந்த சம்பவம் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் செக்‌ஷன் 31(1)(ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று பத்து பஹாத் மாவட்ட காவல்துறை தலைவர் ஷாருல் அனுவார் முஷாடார் சனி கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset