நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவி தனிமையில் ஆபாச படங்களை பார்க்கிறார்: விவாகரத்து கோரிய கணவர் - அதிரடி தீர்ப்பு கூறிய நீதிபதிகள்

மதுரை: 

தனது மனைவி தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பதாகவும் இதனால் கணவர் விவாகரத்து கோரிய வழக்கில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழ்ங்கியுள்ளனர் 

தனிமையில் ஆபாச படங்களை பார்த்து சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது, மாமியாரை துன்புறுத்துவது, எந்த வேலையும் செய்வதில்லை என்று அந்த கணவன் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் 

தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தை மனுதாரரின் மனைவி பார்ப்பதாக கூறுவதை மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.

இருப்பினும், திருமணமான பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது.

இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை, உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரரின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset