நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50% சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு: கைரி ஜமாலுதின் தகவல்

கோலாலம்பூர்:

பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு நாடு முழுவதும் உள்ள சிறார்களில் 50 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.

ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட பெற்றோர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் கைரி வலியுறுத்தி உள்ளார்.

CovidNow: Nearly 98,000 children in Malaysia given first dose of vaccine |  Malaysia | Malay Mail

கொரோனா பாதிப்பால் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதே மிகுந்த கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை நாடு முழுவதும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் 32 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பொறுத்திருந்து பார்ப்போம் என்ற மனப்போக்கை பெற்றோர் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"எனவே, உடனடியாக உங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைத்துச் செல்லுங்கள். தொற்றில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காக்க தடுப்பூசிகள் உதவும். நம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகளில் இருந்து தடுப்பூசி காக்கும்," என்று அமைச்சர் கைரி ஜமாலுதின் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset