நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங்கில் நிலச் சரிவில் தொடர்புடைய 15 குடும்பங்கள் வீடுகளை காலி செய்க: காவல் துறை உத்தரவு 

அம்பாங்: 

அம்பாங் நிலச் சரிவில் தொடர்புடைய 15 குடும்பங்கள் தங்களின் வீடுகளை காலி செய்ய போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

அம்பாங் தாமான் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச் சரிவில் இரண்டு இந்தியர்கள் உட்பட நால்வர் மரணமடைந்தனர். கடும் காயங்களுக்கு இலக்கான மற்றோர் முதியவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜாலான் புக்கிட் பெர்மாய் 1இல் உள்ள 15 குடும்பங்கள் தற்காலிகமாக தங்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீண்டும் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் சரிவுகள் ஏற்பட்டால் அவ்வீடுகளை பாதிக்கும் என்ற அடிப்படையில் அவர்கள் தற்காலிகமாக வீடுகளை காலி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஏசிபி முஹம்மத் பாரோக் இஷாக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset