செய்திகள் மலேசியா
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
ஜித்ரா:
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிந்துள்ளதாக Fusion Intelligence Centre @ StealthMole என்ற தளத்தில் வெளியான தகவல் உண்மையல்ல என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தரவுகள் கசிந்ததாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்று தேசியப் பதிவுத் துறை உறுதிப்படுத்தியது.
ஒரு சமூக ஊடக பயனரிடமிருந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்துத் தாம் சரி பார்த்ததாகவும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து நடத்திய ஆய்வில் எந்தஆதாரமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அதோடு, 17 மில்லியன் மலேசியர்களின் அடையாள அட்டை தரவுகள் கசிந்து போலியான இணையத் தளங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
குறிப்பாக ஒவ்வொரு தனி நபர்களின் தகவல்களை அடையாள அட்டை உள்ளடக்கியது என்று சைஃபுடின் விளக்கினார்.
மேலும், இதுபோன்ற தகவல்களைப் பெறும்போது மக்கள் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
அதோடு, இந்தச் செய்தியைப் பகிராமல் இருப்பதே நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm