செய்திகள் மலேசியா
தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: குணராஜ்
கிள்ளான்:
தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் தெக்குன் வாரிய உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
குறு, சிறு, நடுத்தர வணிகர்களின் மேம்பாட்டிற்காக தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவொரு கடனாக இருந்தாலும் குறைந்த வட்டியில் இந்திய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து கொள்ள இத்திட்டம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
ஆனால் இக்கடனுதவிக்கு எப்படி விண்ணப்பம் செய்வது உட்பட பல சிக்கல்களை இந்தியர்கள் எதிர்நோக்கி வருகின்றார்.
இதானால் இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது.
நிதி முழுமையாக முடியவில்லை என்றால் அடுத்தாண்டு கூடுதல் நிதியையும் கோர முடியாது.
இதன் அடிப்படையில் தான் தெக்குன் கடனுதவி குறித்து சிறப்பு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கிள்ளான் செந்தோசா எம்பிடிகே மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தெக்குன் கடனுதவி குறித்த அனைத்து விளக்கங்களுக் இக்கூட்டத்தில் தரப்படும்.
ஆகவே கிள்ளான் சுற்று வட்டாரத்தில் உள்ள வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என குணராஜ் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 5:34 pm
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது
December 4, 2024, 4:12 pm