நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது

புத்ராஜெயா:

சிங்கப்பூர் ஆடவரும் அவருடைய மனைவியும் 51 மில்லியன் டாலர் மோசடிச் சம்பவம் தொடர்பில் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் 19 ஆண்டாய்த் தலைமறைவாக இருந்தனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர்கள் இருவரையும் சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது.

சிட்டிராயா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான 58 வயது இங் டெக் லீ 2005ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார்.

அவரின் மனைவி 55 வயது தோர் சுவீ ஹுவாவும் அவருடன் சென்றார். அந்த ஆண்டு விசாரணைகள் தொடங்கின.

இங்கைக் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டதாகப் பிரிவு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டது.

இங் மீதும் அவருடைய மனைவி மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset