நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாம்  கட்ட வெள்ள நிலை குறித்துப் பிரதமர் அன்வார் கவலை 

கோலாலம்பூர்: 

இரண்டாம்  கட்ட வெள்ள நிலை  ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.

மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா வழங்கிய முன்னறிவிப்புகளின் அடிப்படையில்  மக்கள் மிகுந்த  எச்சரிக்கையுடன் இருக்க பிரதமர் அறிவுறுத்தினார். 

மேலும், சம்பந்தப்பட்ட வெள்ள தடுப்பு நிறுவனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என்று பிரதமர் அன்வார்  அறிவுறுத்தியுள்ளார்.

மெட்மலேசியா இரண்டாம் கட்ட வெள்ள  நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதைத் தெரிவித்துள்ளது. 

அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அன்வார் கூறினார். 

இன்று காலை 11 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19,558 குடும்பங்களைச் சேர்ந்த 63,728 பேர் 219 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

வெள்ளம் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து இன்று வரை  235,706 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது வரை இத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில்லை.

இதனையடுத்து  கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ளம் தணிய தொடங்கிய நிலையில் பகாங், ஜொகூர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ள நிலை தீவிரமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset