செய்திகள் மலேசியா
விவசாயிகள், மீனவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது: முஹம்மத் சாபு
கோலாலம்பூர்:
விவசாயிகள் அமைப்பு ஆணையச் சட்டம் 1973, விவசாயிகள் அமைப்பு சட்டம் 1973, மீனவர் சங்கச் சட்டம் 1971 ஆகிய மூன்று சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு மறு ஆய்வு செய்வதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) இன் கீழ் உள்ள சங்கங்கள், அமைப்புகள் உட்பட நிறுவனங்களின் நிர்வாகம், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தரத்தை அடைவதற்கு இந்த மறுஆய்வு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
உழவர் அமைப்பு அதிகாரச் சட்டம், விவசாயிகள் அமைப்பு சட்டம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்ட துணைச் சட்டங்கள் பதிவாளரின் மேற்பார்வை செயல்பாடுகளை வலுப்படுத்தும்.
மேலும், இந்தத் திருத்தங்கள் விவசாயிகள் அமைப்பு உறுப்பினர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மீனவர் சங்கத்திலும் ஒரு மீனவர் பிரிவை நிறுவுதல், மீனவர் சங்க உறுப்பினர்களின் உரிமைகளையும் நலன்களையும் இன்னும் விரிவாகப் பாதுகாத்தல், மீனவர் சங்கத்தின் இயக்குநர்கள் குழு தேர்தல் செயல்முறையை மேம்படுத்துதல் ஆகியவை முன்மொழியப்பட்ட திருத்தங்களில் அடங்கும்.
தற்போது RM20,000 ரிங்கிட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இளம் வேளாண் தொழில் முனைவோர் மானியத்தின் (GAM) தொகையை அமைச்சகம் அதிகரிக்குமா என்பது குறித்து டத்தோ முஹம்மத் ஷஹார் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.
அதற்கு முஹம்மத் சாபு இளம் வேளாண் தொழில் முனைவோர் மானியம் RM30,000 ரிங்கிட்டிற்கு உயர்த்த திட்டம் இருப்பதாக கூறினார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 5, 2024, 9:05 am
7 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 50,765ஆக குறைந்தது
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 5:34 pm
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm