நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான் 

ஷா ஆலாம்:

UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது என்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி UITM பல்கலைக்கழகத்தில் இராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்ட 25 வயதான மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

பயிற்சி ஊழியார்கள், மருத்துவ ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் புகார்தாரர்கள் உட்பட 34 நபர்களின் வாக்குமூலங்களை ஷா ஆலாம் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முஹம்மத் இக்பால் இப்ராஹிம் தலைமையில் விசாரணை நடந்து முடிந்தது. 

மேலும், மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைக்காக தனது தரப்பு காத்திருப்பதை ஹுசேன் ஓமர் கான் உறுதிப்படுத்தினார். 

தொடர்ந்து, மருத்துவ அறிக்கையைப் பெற்றவுடன் விசாரணை தொடர்பான சாட்சிகள், தகவல்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்பப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset