நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்

டுரியான் துங்கால்:

நாடு முழுவதும் வெள்ளம் காரணமாக விவசாயப் பொருட்கள், சொத்துக்கள், உள்கட்டமைப்புகள் அழிந்ததில் ஏற்பட்ட இழப்புகளின் அரசாங்கம் மதிப்பிடுகிறது.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை  மூலம் பல தொடர்புடைய ஏஜென்சிகள் இணைந்து தற்போது அனைத்து வெள்ள இடங்களையும் கண்காணித்து வருகிறது.

இதுவரை எங்களிடம் தரவு எதுவும் இல்லை. 

இருப்பினும், மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் இணைந்து நட்பா இழப்பை மதிப்பிடுகிறது.

ஆகையால் அதை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று டத்தோஶ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset