செய்திகள் மலேசியா
கடன் தொகை விகிதத்தைக் குறைக்கும் பாதையில் மலேசியா சரியாகப் பயணிக்கின்றது: இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
கடன் தொகை விகிதத்தைக் குறைக்கும் பாதையில் மலேசியா சரியாகப் பயணிக்கின்றது என்று இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
நாட்டின் கடன் தொகை 2021-ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6.4 விழுக்காட்டிலிருந்து 2022 -ஆம் ஆண்டில் 5.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கு குறைந்துள்ளதை அமீர் ஹம்சா சுட்டிக் காட்டினார்.
மேலும், இவ்வாண்டில் கடன் தொகை 4.3 விழுக்காடாகக் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதை அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.
கூடுதலாக, அடுத்தாண்டு இந்தக் கடன் தொகை விழுக்காட்டை 3.8-ற்கு குறைக்க நிதியமைச்சகம் இலக்கு கொண்டுள்ளதாக தேசியக் கடன் தொகை அளவைப் பற்றி அறிய விரும்பிய செனட்டர் ஹுசின் இஸ்மாயிலின் கூடுதல் கேள்விக்கு அமீர் ஹம்சா இவ்வாறு பதிலளித்தார்.
பொது நிதி, நிதிப் பொறுப்புச் சட்டம் 2023 (சட்டம் 850)-க்கு இணங்க அரசாங்கம் கடன் தொகையைக் குறைக்க முயற்சிப்பதாக அமீர் ஹம்சா கூறினார்.
இது 2026-ஆம் ஆண்டுக்கும் 2028-ஆம் ஆண்டுக்கும் இடையில் கடன் தொகையைக் குறைப்பதே நிதியமைச்சகத்தின் இலக்காகும்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 5:35 pm
UITM பல்கலைக்கழக இராணுவப் பயிற்சி (Palapes) மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்தது: ஹுசைன் ஓமர் கான்
December 4, 2024, 5:34 pm
17 மில்லியன் அடையாள அட்டைகளின் தரவுகள் கசிவா?: உள்துறை அமைச்சு மறுப்பு
December 4, 2024, 4:53 pm
நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்
December 4, 2024, 4:52 pm
ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி
December 4, 2024, 4:51 pm
வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்புகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன: துணைப் பிரதமர்
December 4, 2024, 4:50 pm
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி மலேசியாவில் கைது
December 4, 2024, 4:12 pm