நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெருக்கடிகளால் வந்த குற்றச்சாட்டுகள்: முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்: நஜிப்

கோலாலம்பூர்:

கடந்த 2011ஆம் ஆண்டு 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றதுடன் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நெருக்கடிகளால் வந்தது.

முட்டாள்கள் மட்டுமே இதை  நம்புவார்கள் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

சாட்சி நிலைப்பாட்டிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்ட அவர், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை -அபத்தமானவை என வலியுறுத்தினார்.

அதே வேளையில் குற்றத்தைச் செய்த மூன்று உண்மையான புள்ளிகள் 1 எம்டிபி நிதியில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைத் தப்பிச் சென்றனர்.

தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ, பெட்ரோ சவூதி இன்டர்நேஷனல் லிமிடெட் தலைமை நிர்வாகி தாரெக் ஒபைட் ஆகியோர் ரியல் எஸ்டேட், நகைகள், பிற ஆடம்பரப் பொருட்களைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மில்லியன் முறைகேடான நிதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த விவாகாரத்தில் அரசு தரப்பு என்னை குற்றம் சாட்டியது.

குறிப்பாக பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனது அரசியல் வாழ்க்கை, நற்பெயருக்கு இடையூறு விளைவிப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset