நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் கவனத்தை ஈர்க்கிறார் நஜீப்; அமைதியாக இருக்கிறார் மொஹைதீன்: காட்சிகள் மாறுமா?

ஜொகூர்பாரு: 

ஜொகூர் மக்களின் கவனத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

அதே வேளையில் மற்றோர் முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் அமைதியாக காணப்படுகிறார்.

ஜொகூர் சட்டமன்ற தேர்தல் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அரசில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.
இந்நினையில் பாகோ உட்பட ஜொகூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து டத்தோஸ்ரீ நஜீப் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

ஊழல் விவகாரங்களில் நீதிமன்ற வழக்குகளை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜீப் போராடி வருகிறார்.
இதனை அடிப்படையாக கொண்டு பல தலைவர்கள் டத்தோஸ்ரீ நஜீப்பை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இருந்தபோதிலும் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு போகும் இடங்கள் எல்லாம் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

பல்லின மக்கள் கூட்டமாக கூடி டத்தோஸ்ரீ நஜீப்பை வரவேற்கின்றனர். அவருடன் படம் பிடித்துக் கொள்ள ஆசைப்படுகின்றனர்.  அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை ஓரளவு காட்டுகிறது.

இப்படி ஜொகூர் மக்களின் கவனத்தை தொடர்ந்து டத்தோஸ்ரீ நஜீப் ஈர்த்து வருகிறார்.

ஆனால், தேசிய கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் இவ்விவகாரத்தில் அமைதியாகவே காணப்பட்டு வருகிறார். 

ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவரும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும்தான் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின். அந்த மாநிலத்திற்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். அவர் மத்திய அமைச்சரவையில் இருக்கும் போதும் ஜோகூர் மாநிலத்தை சிறப்பாக கவனித்தவர் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது.

ஆனாலும் அவர் இன்னும் களத்தில் இறங்கவில்லை. இறங்கினால் காட்சிகள் மாறலாம்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset