நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி அமைதி, அன்பால் நிரம்பியதாக இருக்க இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் வாழ்த்துகிறேன்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமான இந்த புனித நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி அமைதி, அன்பால் நிரம்பியதாக இருக்க வாழ்த்துகிறேன். 

அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

வருட இறுதி வந்தாலே அது கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துவிடும்.

பொது விடுமுறை, சொந்த விடுமுறை என்று பலரும் வெளியூர்களுக்குப் பயணிப்பதும் உறவுகளைச் சந்திப்பதும் ஒன்று கூடுதலும் விழாக்களைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில் நிறைந்து காணப்படுகிறது.

கிறிஸ்மஸ், அதன் தொடர்ச்சியாக ஆங்கிலப் புத்தாண்டு. 

உலக மக்கள் அனைவருமே கொண்டாடும் ஒரு புத்தாண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது. 

அந்த வகையில் தொடர்ச்சியான இந்த கொண்டாட்டங்களோடு பாதுகாப்பாகவும் உறவுகளோடு மகிழ்ச்சியாகவும் கொண்டாட மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset