நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அனைத்துலக விமான நிலையம்: சரவாக் மாநிலம் வளர்ச்சி கண்ட மாநிலமாக தரம் உயர்த்தும் 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங்கில் பரிந்துரைக்கப்பட்ட புதிய அனைத்துலக விமான நிலையம் நிர்மாணிக்கப்படுமாயின் அது சரவாக் மாநில வளர்ச்சிக்குப் பேருதவியாக விளங்கும் என்று சரவாக் மாநில பிரிமியர் அபாங் ஜொஹாரி துன் ஒபேங் கூறினார் 

மேலும், சரவாக் மாநிலத்தின் சுற்றுலா, முதலீட்டு, வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்பாடு காணவும் வழிவகுக்கப்படும். 

இந்த விவகாரம் தொடர்பில் சரவாக் மாநில அரசாங்கம் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை செலவிடும் என்று அபாங் ஜொஹாரி செய்தியாளர்களிடம் சொன்னார் 

அதுமட்டுமல்லாமல், புதிய அனைத்துலக விமான நிலையத்தின் வரவால் சரவாக் மாநிலம் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தரம் உயர்த்தப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset