நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாஆ, ஜொகூர். அன்னை தேவ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 30ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது 

சாஆ: 

சாஆ, ஜொகூர் அன்னை தேவ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 30ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா கடந்த  ஞாயிற்றுக்கிழமை மிகக் கோலாகலமாக நடந்தேறியது.

இத்திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட சாஆ வட்டார பொதுமக்களும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்தத் தீமிதித் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பக்தகோடிகள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தியதோடு 100க்கும் மேற்பட்ட பால் குடங்கள், மயில் காவடி என்று பக்தர்கள் எல்லாம் வளமும் நலமும் அருளும் அம்பிக்கைக்குத் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

இந்த ஆலயத்தில் தீமிதித் திருவிழா மருத்துவமாகப் பார்க்கப்படுகிறது என்று 30ஆம் ஆண்டுக் காலமாகத் தீமிதித்து வருகின்ற ஆலயத் தலைமைக் குருக்கள் திரு.ம.பிரேம் குமார் கூறினார்.

பக்தர்கள் தீமிதிப்பதற்கு முன் தீ மூட்டியிருக்கும் தீக்குழியில் மஞ்சள், வெப்பிலை, மருத்துவக் குணம் நிறைந்த இதரப் பொருள்களுடன் பூக்களும் கொட்டப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆலயத் திருவிழாவின் மற்றொரு சிறப்பு அம்சம் மூன்று நாள் தேரோட்டம் ஆகும். இந்த மூன்று நாளும் மாலை வேளையில் அம்பிகை இராஜ அலங்காரத்துடன் தேரில் அமர்ந்து சாஆ வட்டாரத்தை வலம் வருவாள்.

இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தேரோட்டத் திருவிழாவில் மறக்காமல் கலந்து கொள்வேன் என்று திரு.இரா.அறிவின் கூறினார்.

சாஆ வட்டாரத்தில் அமைந்திருக்கும் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் புனரமைப்புகளுக்குப் பிறகு புது பொலிவுடன் திகழ்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset