நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனங்களுக்கிடையில் பிரிவினை விதைகளை விதைப்பதைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் இனங்களுக்கிடையில் பிரிவினை விதைகளை விதைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.

வெற்றிகரமான, திறமையான தேசிய அடையாளத்தை உருவாக்க இனங்களுக்கிடையில் பிரிவினையை விதைக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்கப்பட வேண்டும்.

பரஸ்பர தேவையில் வாழும் இந்த நாட்டில் உள்ள பல இன மக்களைக் கருத்தில் கொண்டு, ஒருவரையொருவர் பூர்த்தி செய்வதுடன் குழிபறிக்கும் அறிகுறிகள் தடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக  இன முரண்பாடுகளின் அறிகுறிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

சில தரப்பினரிம்  சுயநலன்களுக்காக மலேசியா தோல்வியடைந்து முடங்கிவிடக்கூடாது, 

மாறாக உலகளாவிய நீதியின் மதிப்புகள், கொள்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அடிப்படை போராட்டமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset