நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளி்ல் சிறந்த முன்னாள் மாணவர்கள் சங்கமாக பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி தேர்வு

மஞ்சோங்:

மஞ்சோங் மாவட்டத்தில் 15 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி அண்மையில் மலேசியாவில் சிறந்த சங்கமாக, அப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்வானது. 

அச் சங்கத்திற்கு 600 ரிங்கிட் ஊக்கத்தொகை பரிசாக கிடைக்கப்பெற்றது. இதனை மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பேரவை வழங்கி உதவியதாக பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் முல்லைச் செல்வன் முணியான்டி கூறினார்.

கடந்த 1945 ஆம் ஆண்டில் குளோரி தோட்ட தமிழ்ப்பள்ளியாக உருவான து இப்பள்ளி. அதன் பின் பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் பெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கள் இன்றைய பள்ளி நிர்வாகத்தின் ஆதரவோடு ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட்டு வருகிறது. 

இப்பள்ளிக்கு இயன்ற உதவிகள் வழங்குவதிலும், இங்குள்ள மாணவர்கள் கல்வியிலும் புறப்பாடத்திலும் சிறந்த அடைவுநிலையை காண வேண்டும் என்ற நிலையில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் சங்கத்தின் சேவையை கருத்தில் கொண்டு, மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்க பேரவை இவ்வாண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தை தேர்வு செய்தனர். அவற்றில் முதல் இடத்தை மஞ்சோங் மாவட்டத்தின் பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி முதல் இடத்தை வென்றது. இரண்டாவது குவாங் தமிழ்ப்பள்ளியும், மூன்றாவது இடத்தை மஞ்சோங்கை சேர்ந்த ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளியும் வென்றதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த அரிய தருணத்தை கொண்டாடும் வகையிலும், பள்ளிக்கு சேவையாற்றியவர்களை சிறப்பு செய்யும் வகையில் நல்லெண்ண விருந்து ஒன்று நடைபெற்றது. இவ்விருந்தில் முன்னாள் மாணவர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி கடந்த 2015 ல் முறையாக அரசாங்க பதிவேட்டில் பதிவு பெற்ற சங்கமாகும். இச்சங்கம் இப்பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையையும் பொருத்தியுள்ளனர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எங்கிருந்தாலும் குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்புக்கொண்டு தகவல்கள் வழங்கி  பள்ளி மேம்பாட்டிற்கு உதவ முன்வரும்படி முல்லைச்செல்வன் கேட்டுக்கொண்டார். தொடர்புக்கு: 012-4236477 மு.முல்லைச்செல்வன்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset