நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம், நல்வாழ்வின் உணர்வை வலுப்படுத்துவோம்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம், நல்வாழ்வின் உணர்வை வலுப்படுத்துவோம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடன் இணைந்து  சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் உள்ள  தேவாலயங்களுக்கும் மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நாடாளுமன்றத்தில் உள்ள தேவாலயங்களுக்கு ஒதுக்கப்பட்ட எனது சம்பளம், அலவன்சுகளில் இருந்து நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும் சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், பேங்க ரக்யாட் வங்கி அறக்கட்டளை ஆகியவற்றின் கீழ் கிறிஸ்துவ பி40 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.

இந்த உதவிகள் பெறுபவர்கள், அவர்களது குடும்பங்களின் சுமையை சிறிது குறைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடன் இணைந்து, அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் மரியாதை செய்வதற்கு ஒன்றாக இருப்போம்

பரஸ்பர மரியாதை, ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை, வசதி  குறைந்தவர்களுக்கு உதவுதல் என கிறிஸ்துவர்கள் பிற மதங்களை வைத்திருக்கும் மதிப்புகளை முன்னிலைப்படுத்த வேண்டிய நேரம் இது.

மேலும் இந்த நாட்டில் உள்ள செழுமை, பன்முகத் தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுடன் ஒற்றுமையாக இந்த பண்டிகையை கொண்டாடுவது அனைவரின் பங்காகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது அமைச்சரவைக் குழுவின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து தொலைநோக்கு பார்வைகள், பணிகள் வெற்றியடைய எல்லா நேரங்களிலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லிணக்கம், நல்வாழ்வின் உணர்வை வலுப்படுத்துவோம்.

இறுதியாக அனைத்து மலேசியர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset