நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென்று தரையிறக்கப்பட்டன. 

விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. 

தற்போது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து சில மணிநேர கால தாமதத்திற்கு பின்னர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset