நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆகஸ்ட் மாதத்துக்குள் 18 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு: இந்திய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.  

இதையடுத்து கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தவும் வேகப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி-யின் 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ்கள் நாளை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்துவரும் சீரம் இந்தியா நிறுவனம் உற்பத்தி அளவை 10 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான இயக்குநர் பிரகாஷ் குமார் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

இதேபோன்று கோவாக்ஸின் தடுப்பூசியை,த் தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி அளவை 8 கோடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களுமே ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு செயல்பட முன்வந்துள்ளன. மேலும் செப்டம்பர் மாதமும் இதே உற்பத்தி அளவு நீடிக்கும் என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சில மாநில முதல்வர்கள் அந்த நிறுவனம் குறித்து பிரதமர் மோடியிடம் புகார் அளித்திருப்பதாக வெளியான தகவல் வருத்தமளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா கூறியுள்ளார்.

அந்தத் தகவலை அறிந்தபோது தமது நெஞ்சம் சிதறுண்டு போனதுபோல் உணர்ந்ததாக அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 50 ஊழியர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனராம். நிலைமை அவ்வாறு இருந்தும் முழுநேர ஊரடங்கு போன்ற சவால்களைச் சமாளித்து உற்பத்தியில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றிலிருந்து மீ்ண்டாலும் தடுப்பூசி அவசியம். மேலும், தொற்றிலிருந்து மீண்டவர்களும்கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. பாதிப்பிலிருந்து மீண்ட 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset