நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி: 1,400 கேரளத்தினர் மீது வழக்கு

திருவனந்தபுரம்:

குவைத்தில் ரூ.700 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்று கேரளத்தைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் செவிலியர்களாவர்.

இந்த மோசடி தொடர்பாக கேரளத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்டோர் மீது கடன் மோசடி புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் பலர் குவைத்தில் பணியாற்றியபோது அந்நாட்டு வங்கியில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கேரளம் திருப்பியுள்ளனர்.

சிலர் வேறு நாடுகளில் பணிக்குச் சென்றுவிட்டனர். ஒவ்வொருவரும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை குவைத் வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.

வேறு பல வளைகுடா  மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்குச் செல்பவர்களும் அந்நாட்டில் இதேபோன்று கடன் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset