நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உக்ரைன் என்ஜினுடம் ரஷியாவில் உருவாக்கப்பட்ட இந்திய போர்க் கப்பல் துஷில்

புதுடெல்லி:

உக்ரைன் என்ஜினுடன் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது.

துஷில் போர்க்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

துஷில் போர்க் கப்பல் 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடை உடையது. இந்தக் கப்பலில் இந்திய, ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் கொண்ட தாக்குதல் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து வானத்தில் ஏவும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset